கிணத்துக்கடவில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் திடீர் ஆய்வு

பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு, திடீரென பேருந்து நிலையம் மற்றும் வடபுதூர் பகுதியிலுள்ள திரையரங்கங்களுக்கு சென்று ஆய்வு பணியில் ஈடுபட்டார்.


கோவை: பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு, திடீரென பேருந்து நிலையம் மற்றும் வடபுதூர் பகுதியிலுள்ள திரையரங்கங்களுக்கு சென்று ஆய்வு பணியில் ஈடுபட்டார்.

பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் இன்று மாலை கிணத்துக்கடவு வந்தார். பின்னர் அவர் தாலுகா அலுவலகத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு திடீரென கிணத்துக்கடவு பேருந்து நிலையம் மற்றும் வடபுதூர் பகுதியிலுள்ள திரையரங்கங்களுக்குச் சென்றார்.



அங்கு பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் திரையரங்க பகுதி சுத்தமாக உள்ளதா? கழிப்பறைகள் சுத்தமாக உள்ளதா? திரையரங்கத்துக்குள் வைக்கப்பட்டுள்ள தீ தடுப்பான் கருவிகள் முறையாக செயல்படுகிறதா? அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? அங்கு உள்ள கேன்டீன்களில் விற்கப்படும் தின்பண்டங்கள் தரமானதாக உள்ளதா? திரையரங்க உரிமம் புதுப்பிக்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு நடத்தினார்.

இந்த ஆய்வின்போது சப்-கலெக்டருடன் கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகா, கிணத்துக்கடவு மண்டல துணை தாசில்தார் ராமராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் வாசுதேவ், விமல்மாதவன் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் உடன் வந்திருந்தனர். பொள்ளாச்சி சப்-கலெக்டர் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள திரையரங்கங்களில் திடீரென ஆய்வு பணியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...