கொரோனா பரவல்: கிணத்துக்கடவு பகுதியில் வழிபாட்டுத் தலங்கள் மூடல் - சூலக்கல் மாரியம்மன் கோவில் நுழைவாயிலில் நின்று பக்தர்கள் வழிபாடு..!

தமிழக அரசின் மறு உத்தரவு வரும் வரை இந்த கட்டுப்பாடுகள் இருக்கும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அந்தந்த கோவில்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.


கோவை: தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகள் உத்தரவுபடி கிணத்துக்கடவு பகுதியில் வழிபாட்டுத் தலங்கள் மூடல்- சூலக்கல் மாரியம்மன் கோவில் நுழைவாயிலில் நின்று பக்தர்கள் வழிபாடு

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் 6ம் தேதி வியாழக்கிழமை முதல் இரவு ஊரடங்கும், வெள்ளி, சனிக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களை மூடவும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, நேற்று வியாழக்கிழமை முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று வெள்ளிக்கிழமை அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு பகுதியில் உள்ள பொன்மலை வேலாயுதசுவாமி கோயில், சிவலோகநாதர் கோயில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளது.

இதேபோல் கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவில் மூடப்பட்டு, வழக்கம்போல் நடைபெறும் பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை என்பதால் சூலக்கல் மாரியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர்.



ஆனால், கோவிலுக்குச் செல்ல அனுமதி இல்லாததால் கோவிலின் நுழைவாயிலில் முன்பு கற்பூர தீபம் ஏற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தமிழக அரசின் மறு உத்தரவு வரும் வரை இந்த கட்டுப்பாடுகள் இருக்கும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அந்தந்த கோவில்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...