பொள்ளாச்சி அருகே சாலை விரிவாக்கத்திற்காக அப்புறப்படுத்தப்படும் மக்களுக்கு மாற்று இடம் கோரி சார் ஆட்சியரிடம் மனு..!

வேறு இடம் இல்லாமல் அச்சத்துடன் அப்பகுதியிலேயே குடியிருந்து வருவதாகவும் பலமுறை அதிகாரிகளிடம் மனுகொடுத்தும் எந்த பலனும் இல்லை என குற்றம்சாட்டினர்.


கோவை: பொள்ளாச்சி அருகே சாலை விரிவாக்கத்திற்காக அப்புறப்படுத்தப்படும் மக்களுக்கு மாற்று இடம் கோரி பொதுமக்கள் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பொள்ளாச்சி மீன்கரை ரோடு பகுதியில் சாலை விரிவாக்கப் பணிக்காக குடியிருப்புகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு பாதிக்கப்படும் மக்களுக்கு மாற்று இடம் கொடுக்கக் கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

பொள்ளாச்சி மீன்கரைரோட்டில், சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து, சாலை விரிவாக்க பணிக்காக, நெடுஞ்சாலைத்துறையினர் எங்களை காலி செய்யுமாறு வற்புறுத்தி வருகின்றனர்.

ஆனால், எங்களுக்கு வேறு இடம் இல்லாமல் அச்சத்துடன் அப்பகுதியிலேயே குடியிருந்து வருகிறோம். பலமுறை அதிகாரிகளிடம் மனுகொடுத்தும் எந்த பலனும் இல்லை.

எனவே, நெடுஞ்சாலை துறையினரால், சாலை விரிவாக்கப் பணி காரணமாக, எங்கள் குடியிருப்புகள் அகற்றக்கூடிய நிலையில், எங்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...