குடியரசு தினவிழா அணிவகுப்பில் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவையை சேர்ந்த நாட்டிய பள்ளி மாணவியர் தேர்வு..!

அணிவகுப்புக்கான அனைத்து பயிற்சிகளும் மிகச்சிறந்த கலைஞர்களால் வழங்கப்படும் என்று பள்ளி நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்.


கோவை: டெல்லியில் வரும் ஜனவரி 26ல் நடக்கும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து மூன்று அணிகள் தேர்வாகியுள்ளன. அவற்றில் கோவையைச் சேர்ந்த ஸ்ரீ நாட்டிய நிகேதன் பள்ளி அணியும் தேர்வாகியுள்ளது.

இது குறித்து பள்ளி நிர்வாக இயக்குனர் மிதுலா ராய் கூறியதாவது:-

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க, தேர்வாகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மொத்தம், 75 அணிகள் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தேர்வாகின. டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடந்த இறுதிப் போட்டியில், தமிழகத்தில் இருந்து, மூன்று அணிகள் தேர்வாகின.

எங்கள் அணி பரதநாட்டிய பிரிவில் தேர்வாகியுள்ளது. 14 பேர் இதற்காக தேர்வாகியுள்ளனர். வரும் 8-ம் தேதி முதல் வரும், 20 நாட்கள் டில்லியில் தங்கியிருக்க வேண்டும். அணிவகுப்புக்கான அனைத்து பயிற்சிகளும் மிகச்சிறந்த கலைஞர்களால் வழங்கப்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...