2017 ஆம் ஆண்டு மது குடிக்க பணம் தராததால், எட்டிமடையை சேர்ந்த சந்திரன் என்பவர், கோவை ஆடீஸ் வீதியில் காவலாளியாக வேலைப்பார்த்து வந்த ராமன் (55) என்பவரை கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்துள்ளார்.
கோவை: மது குடிக்க பணம் தராத காவலாளியை கொலை செய்த சுமை தூக்கும் தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, கோவை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
கோவை நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் ராமன் (55). இவர், ஆடீஸ் வீதியில் உள்ள ஒரு குடோனில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த 24.3.2017 அன்று இரவு, ராமன் காவல் பணியில் இருந்த போது எட்டிமடையை சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளி சந்திரன் (43) என்பவர் குடோன் பகுதிக்கு வந்துள்ளார்.
அவர், மதுகுடிக்க பணம் கேட்டு ராமனிடம் தகராறு செய்துள்ளார், ராமன் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால், ஆத்திரம் அடைந்த சந்திரன், காவலாளி ராமனை அடித்து உதைத்து கீழே தள்ளியுள்ளார். பின்னர், கீழே கிடந்த கல்லை எடுத்து ராமனின் தலையில் போட்டார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து, ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் இந்த கொலையில் உடனடியாக துப்பு கிடைக்காததால், தீவிர விசாரணைக்கு பின்னர், 2018-ம் ஆண்டு இந்த கொலை வழக்கில் சந்திரன் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், ராமனை சாதிபெயரை சொல்லி திட்டியதும், தெரிய வந்ததால் சந்திரன் மீது கொலை மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை சட்டப்பிரிவும் (எஸ்.சி.-எஸ்.டி.) சேர்க்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையானது, கோவை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று இறுதி கட்ட வழக்கு விசாரணை நடைபெற்றது
வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி சக்திவேல், குற்றம் சாட்டப்பட்ட சந்திரனுக்கு கொலை குற்றத்துக்கு ஆயுள்தண்டனையும், ரூ.1000 அபராதமும், எஸ்.சி.-எஸ்.டி. சட்டப்பிரிவில் மற்றொரு ஆயுள் தண்டனையும் விதித்து இரட்டை ஆயுள் தண்டனையை தீர்ப்பாக வழங்கினார் .
இரட்டை ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட சந்திரன் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.