கோவையில் பாஜக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

கோவையில் பஞ்சாப் அரசைக் கண்டிக்கும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் விநாயகர் கோவிலில் பிரதமர் பல்லாண்டு வாழ வேண்டும் என சிறப்புப் பூஜையும் மேற்கொண்டனர்.


கோவை: கோவையில் பஞ்சாப் அரசைக் கண்டிக்கும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நேற்றைய தினம் பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்தித்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் சென்ற போது பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் கட்சியினர் திரண்டதால் பிரதமரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுத் திரும்பியதாகச் செய்திகள் வெளியாகின. இச்செய்தியானது பாஜக கட்சியினர் இடையேயும் இந்து அமைப்புகள் பலர் இடத்திலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்ட பாஜகவினர் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையில் காந்திபுரம் சிக்னல் அருகில் உள்ள விநாயகர் கோவில் அருகில் வரிசையாக நின்று பிரதமரின் பாதுகாப்பைப் பஞ்சாப் மாநில அரசு உதாசீனப்படுத்தியதாகக் கூறி அதனைக் கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தியும், "பஞ்சாப்பை ஆள்வது காங்கிரஸ் கட்சியால் இல்லை காலிஸ்தான் தீவிரவாதிகளா" இந்த பதாகைகளை ஏந்தியவாறும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

மேலும் விநாயகர் கோவிலில் பிரதமர் பல்லாண்டு வாழ வேண்டும் என சிறப்புப் பூஜையும் மேற்கொண்டனர்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...