கோவையில் அரசு பள்ளியில் சூயஸ் குடிநீர் திட்டத்திற்காக தண்ணீர் தொட்டி அமைப்பதற்கு எதிர்ப்பு - இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!

பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் குடிநீர் தொட்டி அமைத்தால், மாணவர்கள் விளையாடுவது பாதிக்கப்படும் என அப்பள்ளி மாணவர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் சுயஸ் குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்கள் அமைக்கும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது.



இத்திட்டத்திற்காக, ராமநாதபுரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் குடிநீர் தொட்டி அமைப்பதற்காக மரங்கள் வெட்டப்பட்டு ஜேசிபி எந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்டும் பணிகள் துவங்கியுள்ளன.



பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் குடிநீர் தொட்டி அமைத்தால், மாணவர்கள் விளையாடுவது பாதிக்கப்படும்என அப்பள்ளி மாணவர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் இணைந்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தனியார் நிறுவனத்தின் குடிநீர் தொட்டி அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரியும், மாவட்ட நிர்வாகம் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஆர்ப்பாட்டத்தின் போது முழக்கங்களை எழுப்பினர்.



Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...