ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு தமிழக ஆளுநர் அஞ்சலி

குன்னூர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்குத் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மலர் வளையம் வைத்தும், மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



நீலகிரி: குன்னூர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்குத் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மலர் வளையம் வைத்தும், மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் டிசம்பர் 8-ஆம் தேதி கோவை சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து வெலிங்டன் ராணுவ மையத்தை நோக்கிச் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் மேக மூட்டத்தின் காரணமாக மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மதுலிகா மற்றும் ராணுவ அதிகாரிகள் உட்பட 14-பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்குத் தமிழக முதல்வர் வெலிங்டன் ராணுவ மையத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து ஹெலிகாப்டர் விழுந்து விபத்து ஏற்பட்ட நஞ்சப்பா சத்திரம் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு ராணுவ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு, விமானப்படை அதிகாரிகள் மற்றும் ராணுவ துறையினர் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் அனைத்து பாகங்களையும் சேகரித்து சூலூர் விமானப்படைத் தளத்துக்குக் கொண்டு சென்றனர்.

இதனையடுத்து கடந்த 18-நாட்களாக ராணுவ கட்டுப்பாட்டிலிருந்து வந்த நஞ்சப்பா சத்திரம் பகுதியிலிருந்து இராணுவத்தினர் வெளியேறி தடையை விலக்கிக் கொண்டனர்.



இதனைத் தொடர்ந்து உதகைக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி குன்னூர் நஞ்சப்பா சத்திரம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட பகுதியில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் புகைப்படத்திற்கு மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.



அவருடன் அவரது மனைவி, மகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.



மேலும் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் வசிக்கும் மக்களிடம் விபத்து குறித்தும் மீட்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...