இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த இருவருக்கு 20-ஆண்டு சிறை- கோவை நீதிமன்றம் உத்தரவு

பொள்ளாச்சியில், கணவரைப் பிரிந்து வாழ்ந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த இருவருக்கு தலா 20-ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா 5-ஆயிரம் அபராதம் விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறபித்துள்ளது.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், கணவரைப் பிரிந்து வாழ்ந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த இருவருக்கு தலா 20-ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா 5-ஆயிரம் அபராதம் விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறபித்துள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்த 2-வது கணவரைப் பிரிந்த 28-வயதான பெண் வாழ்ந்து வருகின்றார்.



இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு, அந்த பெண்ணை, கணவருடன் சேர்த்து வைப்பதாகக் கூறி, அவரது குடும்ப நண்பர்களான விமல்ராஜ், கார்த்திக் ஆகியோர் ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது, வடுகபாளையம் வழியில் செல்லும் புத்து மாரியம்மன் கோவில் அருகே புதரில் அந்த பெண்ணை தாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணையில் அரசு சார்பில் வழக்கறிஞர் ஜிஷா ஆஜராகினார்.

தொடர்ந்து இந்த வழக்கில், பெண்ணை தாக்கி கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட விமல்ராஜ், கார்த்திக் ஆகிய இருவருக்கு தலா 20-ஆண்டு சிறைத் தண்டனையும், தலா 5 ஆயிரம் அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி உத்திரவிட்டார்.

குற்றவாளி கார்த்திக் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், கார்த்திக்கை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...