கோவையில் காவலாளியை கொன்ற தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

மது குடிக்க பணம் கேட்டு தராததால் காவலாளியை கொலை செய்த தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி கோவை கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.


கோவை: மது குடிக்க பணம் கேட்டு தராததால் காவலாளியை கொலை செய்த தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி கோவை கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

காவலாளியை கொன்று தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு கூறியது. கோவை கணபதி அருகே உள்ள நல்லாம் பாளையத்தை சேர்ந்தவர் ராமன்(வயது55). இவர் ஆடீஸ் வீதியில் உள்ள நாகராஜ் என்பவருக்குச் சொந்தமான குடோனில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ந்தேதி ராமன் பணியிலிருந்தபோது எட்டிமடையை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி சந்திரன் என்கிற சந்திரசேகரன் (43) என்பவர் வந்து மது குடிக்க பணம் கேட்டார்.

ஆனால் ராமன் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சந்திரசேகரன், காவலாளி ராமனை தாக்கி கீழே தள்ளினார்.

பின்னர் அங்கு கிடந்த கல்லை எடுத்து அவரது தலையில் தாக்கி முகத்தைச் சிதைத்து கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சந்திரசேகரனை ஒரு வருடத்திற்குப் பின்னர் கைது செய்தனர்.

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சக்திவேல் காவலாளியை கொடூரமாகக் கொலை செய்த சந்திரசேகரனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும், கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...