பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் வெளிமாநில மாடுகள் வரத்து குறைவு - வியாபாரிகள் கவலை

தமிழகம், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் காரணத்தினால் இன்று பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் குறைந்த அளவிற்கு மாடுகள் விற்பனைக்கு வந்தது.


கோவை: தமிழகம், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் காரணத்தினால் இன்று பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் குறைந்த அளவிற்கு மாடுகள் விற்பனைக்கு வந்தது.



தென்னிந்தியாவில் புகழ்பெற்று விளங்கும் பொள்ளாச்சி மாட்டுச் சந்தை தமிழகத்தில் பாரம்பரிய மாட்டுச்சந்தையாகக் கருதப்படுகிறது. வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில் தற்போது தமிழகம், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் காரணத்தினால் இன்று பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் குறைந்த அளவிற்கு மாடுகள் விற்பனைக்கு வந்தது.



குறிப்பாகக் கேரளாவிலிருந்து அதிக வியாபாரிகள் மாடுகளை வாங்கிச் செல்வது வழக்கம். கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் அங்கிருந்து வியாபாரிகள் வரவில்லை என்றும் அதைப்போல் பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் விவசாயிகள் மாடுகளை விற்பனைக்குக் கொண்டுவராத காரணத்தினாலும் மாடுகள் வரத்து குறைந்து உள்ளதாகவும், இதனால் இத்தொழிலை நம்பியுள்ள நூற்றுக்கணக்கான லாரி ஓட்டுநர்கள் வியாபாரிகள் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக மாட்டு வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

வரும் காலங்களில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மாட்டுச்சந்தை நடத்த அரசு வழிவகை செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...