கோவையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எதிர்ப்பு - பொதுமக்கள் சாலை மறியல்..!

சூலூர் அருகே பொங்கல் பரிசு தொகுப்பு கொடுப்பதில் முன்னாள் தலைவர் மற்றும் இன்னாள் தலைவருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.


கோவை: கோவையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எதிர்ப்பு தெரிவித்ததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை, சூலூர் அப்பநாயக்கன்பட்டியில் பொங்கல் பரிசு தொகுப்பு கொடுப்பதில் முன்னாள் தலைவர் மற்றும் இன்னாள் தலைவருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ரேஷன் கடையில் உள்ள பொருட்கள் கொடுக்காததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை அடுத்த சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி மன்ற தலைவராக சாந்தி ராஜேந்திரன் இருந்து வருகிறார். இவர் அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்று தற்போது தி.மு.க கட்சியில் இணைந்துள்ளார்.

இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு பொருள்கள் நேற்று முதல் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. இதனை ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.

அப்போது அந்த ஊராட்சியின் முன்னாள் தலைவர் தங்கவேலு, மற்றும் சிவசண்முகம், ஆகியோர் பொருட்களை கொடுக்கக் கூடாது என தற்போதைய ஊராட்சி மன்ற தலைவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

மேலும், பொருட்களை தர விடாமல் பொருட்களை பிடுங்கி வீசினர். இதன் காரணமாக ரேஷன் கடை ஊழியர் கடையை மூடி பொருட்கள் கொடுக்காமல் இருந்துள்ளார். இதனையடுத்து பொருட்களை வாங்க வந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் காவல் ஆய்வாளர் மாதையன், மற்றும் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதானம் பேசி பொருட்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்தனர்.

தற்போதைய தி.மு.க ஊராட்சி தலைவர் பொங்கல் பரிசு வழங்கும் விழாவில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பொங்கல் பரிசு கொடுக்காமல் தடுத்து நிறுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அங்கு நடைபெற்ற இந்த கலவரம் சி.சி.டிவி. காட்சியில் பதிவாகியிருந்தது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...