மேலும், தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரங்களையும் தேர்தல் முடிவுகளையும் இணையதளத்தில் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. ஒவ்வொரு நாளும் எத்தனை பேர் மனுத் தாக்கல் செய்கின்றனர் என்ற விபரத்தை மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
வேட்பாளர்களின் சொத்து விவரங்களையும் அன்றைய தினமே பதிவேற்ற வேண்டும். ஓட்டுப்பதிவு விவரங்களை உடனுக்குடன் பதிவிட வேண்டும். ஓட்டு எண்ணிக்கையின் போது, சுற்றுவாரியாக இணையதளத்தில் வெளியிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து தேர்தல் பிரிவினர் கூறுகையில், கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தி வருவதால் ஓட்டுப்பதிவு தள்ளிப்போக வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும். வேட்பாளர்களின் சொத்து விவரங்களையும் ஓட்டுப்பதிவு ஓட்டு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றனர்.