மேலும், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள 21 கிலோ மீட்டர் சாலைக்கும் சேர்த்து சுங்க வசூல் என்பது முறைகேடு என்று போராட்டம் நடத்தினர்.
திருப்பூர்: திருப்பூர் மாநகர பகுதியில் வேலம்பட்டி குட்டையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி விவசாய அமைப்புகள் மற்றும் அனைத்து கட்சியினர் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் வேலம்பட்டி பகுதியில் அமைந்துள்ள சிறிய குளத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சுங்கச்சாவடி மையம் பராமரிக்கும் சாலை 32 கிலோ மீட்டர் எனும் நிலையில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் 21 கிலோ மீட்டர் சாலை அமைந்துள்ளது.

இந்த சாலைக்கும் சேர்த்து சுங்க வசூல் என்பது முறைகேடு எனவும், குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற வேண்டும் என வேலம்பட்டி சுங்கச்சாவடி எதிர்ப்பு இயக்கம், விவசாய அமைப்புகள், மற்றும் அனைத்து கட்சியினர் இணைந்து புதிதாக கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடி கட்டிடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.