டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மீது குண்டர் சட்டம் - கோவை மாவட்ட போலீசார் நடவடிக்கை..!

ரவுடி பேபி சூர்யா மற்றும் நண்பர் சிக்கந்தர் ஆகியோர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


திருப்பூர்: டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மீது குண்டர் சட்டம் போட கோவை மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

திருப்பூரை சேர்ந்தவர் சூர்யா (35). இவர் ரவுடிபேபி சூர்யா என்ற பெயரில் டிக்டாக் செய்து பிரபலமானவர். இவருடைய நண்பர் மதுரையைச் சேர்ந்த சிக்கந்தர். இவர்கள் 2 பேரும் சேர்ந்து ஏராளமான டிக்டாக் வீடியோக்களை தயாரித்து வெளியிட்டுள்ளனர். யூடியூப் சேனலை தொடங்கியும் வீடியோக்களை வெளியிட்டனர்.

இதற்கிடையில், கோவை பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் யூடியூப் சேனல் நடத்தி வந்தார். அவரை ரவுடி பேபி சூர்யாவும், அவரது நண்பரும் சேர்ந்து ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசி வீடியோ வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து அந்த பெண் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின்பேரில் ரவுடி பேபி சூர்யா, நண்பர் சிக்கந்தர் ஆகியோர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், மதுரையில் பதுங்கி இருந்த 2 பேரையும் கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ரவுடிபேபி சூர்யா கோவை மத்திய சிறையிலும், சிக்கந்தரை பொள்ளாச்சி கிளை சிறையிலும் அடைத்தனர்.

ரவுடிபேபி சூர்யா மீது பல்வேறு மாவட்ட போலீசில் ஏற்கனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து இதுபோன்று ஆபாசமாக பேசி யூடியூப் சேனலில் அவர் பதிவு செய்து வருவதால், அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அவர் மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகள் எத்தனை? என்று மாவட்ட வாரியாக ஆய்வு செய்து அதன் அடிப்படையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்யப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அவரும், சிக்கந்தரும் நடத்தி வந்த யூடியூப் சேனலை முடக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...