கோவையில் குழந்தைகளை தாக்கும் டெங்கு காய்ச்சல்: 32-குழந்தைகள் பாதிப்பு

கோவை அரசு மருத்துவமனையில் 32-குழந்தைகள் உள்பட 47-பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் 32 குழந்தைகள் உள்பட 47 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவையில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலால் 47-பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று அச்சுறுத்தி வரும் வேளையில் டெங்கு காய்ச்சலும் சற்று தலை தூக்கி மக்களை அச்சத்தில் ஆழ்த்துகிறது.

தமிழகத்தைப் பொறுத்தமட்டில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. குழந்தைகள், பெரியவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் 32- குழந்தைகள் உள்பட 47- பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாகச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாநகர் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. மாநகர் பகுதியில் ஒரு வார்டுக்கு 15-பேர் வீதம் 1500-பேர் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படுவதுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

டெங்கு காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்தும் சூழலில் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

கொரோனாவுக்கு மத்தியில் இந்த குளிர் காலத்தில் நமக்கு மற்றொரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது டெங்கு பாதிப்பு. டெங்கு காய்ச்சல் ஏடீஸ் வகை கொசுக்களினாலேயே பரவுகிறது. பொது இடங்களிலும், வீடுகளிலும் நீர் தேங்கி இருந்தால், அதில் இந்த கொசுக்கள் மிக எளிதாக இனப்பெருக்கம் செய்யும். இதனால் டெங்கு பாதிப்பு வேகமாகப் பரவும். இதனால் பொது இடங்கள் மற்றும் வீடுகளில் கொசுக்கள் எளிதாக உற்பத்தியாக ஏதுவாக மழை நீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்யத் தமிழ்நாடு சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் பெரும்பாலான பகுதிகளில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள்ளேயே இருக்கிறது. இருப்பினும், கோவை மாவட்டத்தில் இந்த மாதம் டெங்கு பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...