கோவையில் இருவேறு இடங்களில் நடந்த கொள்ளை சம்பவங்கள்... பூட்டிய வீடுகளை குறிவைக்கும் மர்ம நபர்கள்

கோவையில் நடந்த இருவேறு திருட்டு சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் திருட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் நடந்த இருவேறு திருட்டு சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் திருட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

கோவை சூலூர் மைலம்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 40). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார்.

இவர் கடந்த 2-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார். பின்னர் நேற்று வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்ட இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த 2 பவுன் தங்க நகைகள் மற்றும் பூஜை அறையிலிருந்த வெள்ளி பொருட்கள் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து பிரகாஷ் சூலூர் போலீசில் புகார் தெரிவித்தார்.

போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளைப் பதிவு செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்து வீட்டின் பூட்டை உடைத்துக் கொள்ளையடித்த கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

இதேபோன்று சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (37). பைனான்சியர். இவர் குடும்பத்துடன் திருப்பூர் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அவரின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த ரூ.3 லட்சம் திருட்டுப் போயிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவர் சிங்காநல்லூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...