பணமா கேக்குற..?? கோவையில் மளிகை கடை உரிமையாளரை தாக்கிய ஓட்டுநர் கைது

மதுக்கரையில் மளிகை கடையில் வாங்கிய பொருட்களுக்கு பணம் கேட்டதால் ஆத்திரமடைந்து கடை உரிமையாளரை தாக்கிய அரசு பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: கோவையில் மளிகை கடையில் வாங்கிய பொருட்களுக்கு பணம் கேட்டதால் ஆத்திரமடைந்து கடை உரிமையாளரை தாக்கிய அரசு பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மதுக்கரை தண்டபாணி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அரசன் (வயது 37). இவர் வீட்டின் முன்பு மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் செழியன் (47). அரசு பேருந்து ஓட்டுநர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு செழியன் ரூ. 6 ஆயிரத்துக்கு அரசன் கடையிலிருந்து மளிகை பொருட்களை வாங்கினார்.

ஆனால் அதற்கான பணத்தை அவர் தரவில்லை. இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு அரசன் தனது கடையில் வேலை செய்யும் முருகன் என்பவரை அவரது வீட்டுக்கு அனுப்பி பணம் வாங்கி வருமாறு கூறினார்.

அப்போது அங்குச் சென்ற முருகனிடம் அவர் பணம் தர மறுத்து அவரை சத்தம் போட்டு அனுப்பி விட்டார். இந்த நிலையில் நேற்று அரசன் தனது மனைவியை அழைத்துக்கொண்டு செழியன் வீட்டிற்குச் சென்றார்.

அப்போது அங்கு குடிபோதையிலிருந்த செழியன் மீண்டும் பணம் தர மறுத்து தகராற்றில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த அவர் அரசனைத் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதில் பலத்த காயமடைந்த அரசனை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். பின்னர் இது குறித்து அரசன் மதுக்கரை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து அரசு பேருந்து ஓட்டுநர் செழியனைக் கைது செய்தனர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...