100-நாள் வேலைத்திட்டம்: அரசுக்கு கோவை மாவட்ட விவசாயிகள் சங்கம் கோரிக்கை

அரசின் 100-நாள் வேலைத் திட்ட பணியாளர்களை விவசாயப் பணிகளுக்கு உட்படுத்த தமிழக விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: அரசின் 100-நாள் வேலைத் திட்ட பணியாளர்களை விவசாயப் பணிகளுக்கு உட்படுத்த தமிழக விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாவட்டம் பந்தயச்சாலை பகுதியில், உள்ள தனது அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு. பழனிச்சாமி கூறுகையில்:-

கொங்கு மண்டலம் என்றழைக்கப்படும், கோவை, திருப்பூர் ஈரோடு, ஆகிய பகுதிகளில் மானாவாரி பயிராக மஞ்சள், மஞ்சள் சோளம், மக்காச்சோளம், பயிரிடப்பட்டுள்ளது. அனைத்து பயிர்களும் தற்போது நல்ல விளைச்சல் அடைந்துள்ளது.

அதனைக் கதிர் அறுத்துப் பாதுகாக்க பல்வேறு இடர்பாடுகளுக்கு விவசாயிகள் ஆளாகி வருகின்றனர். காரணம், ஆட்கள் பற்றாக்குறை பெரிய குறையாக உள்ளது. குறிப்பாக மாநகர் பகுதிகளில், பேரூராட்சி பகுதி, நகராட்சி பகுதிகளில், செய்யப் படுகின்ற விவசாயப் பணிகளின் ஒரு பகுதியாக மஞ்சள் சோளம் விதைக்கப்பட்டு, அறுவடைக்குத் தயாராக இருந்தும் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக அதனை அறுவடை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில், அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அரசு, இந்த 100 நாட்கள் வேலைத் திட்டத்தில் பணிக்கு வரும் பணியாளர்களை விவசாயப் பணிகளுக்கு உட்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். தற்போது, அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள், சாலையைச் சுத்தம் செய்வது, குப்பைகளை அப்புறப்படுத்துவது, தேவையற்ற மரக்கிளைகளை வெட்டுவது, கால்வாய்களைத் தூர்வாருவது, பொன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் இந்த பணியாளர்களை 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ், விவசாயப் பணிகளுக்காக பயன்படுத்தப் பட்டால் மீண்டும் விவசாயம் செழிக்கும், நாடும் வளம் பெறும் என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...