பெரியநாயக்கன்பாளையத்தில் கஞ்சா விற்பனை- ஒருவர் கைது

சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.


கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டு போலீசார் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்கும் பொருட்டு பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாகத் தடை செய்யப்பட்ட உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய போதைப் பொருட்களை விற்பனை செய்வதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையில், பெரிய நாயக்கன் பாளையம் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிவசந்திர சகானி என்பவரது மகன் திலிப்சகானி (வயது-39) என்பவரைக் கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1.100 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

இது போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்கக் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

Newsletter

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...