கோவை மாவட்டத்தில் 2730 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது; மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர்

கோவை அரசு மருத்துவமனையில் 1500, இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 376, கொடிசியா அரங்கில் 350 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன.


கோவை: கொரோனா சிகிச்சைக்காக கோவை மாவட்டத்தில் 2730 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. குறிப்பாக, கோவை அரசு மருத்துவமனையில் 1500 படுக்கைகளும், இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 376 படுக்கைகளும், கொடிசியா அரங்கில் 350 படுக்கைகளும் தயாராக உள்ளது என்று கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் பேசுகையில், தமிழகத்தில் மீண்டும் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக, கோவையிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. 15 முதல் 18 வயதுடையவர்களுக்கு 11,080 தடுப்பூசி முதல் நாளிலும், இரண்டாம் நாள் 7000 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.



கோவை மாவட்டத்தில், கொரோனா இரண்டாம் அலையின் போது நாள் ஒன்றுக்கு 4800 வரை தொற்று பதிவானது. அதை கருத்தில் கொண்டு, எடுக்கப்பட்டு வந்த தடுப்பு நடவடிக்கையின் காரணமாக 80க்கும் கீழ் வைரஸ் தொற்று வந்தது.

தமிழக அரசின் புதிய கொரோனா விதிமுறைகள் கோவையில் நாளை முதல் கடைபிடிக்கப்படும். அதன்படி, மாவட்டத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு, இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும். ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவை மாவட்டத்தில் 2730 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. குறிப்பாக, கோவை அரசு மருத்துவமனையில் 1500 படுக்கைகளும், இஎஸ்.ஐ மருத்துவமனையில் 376 படுக்கைகளும், கொடிசியா அரங்கில் 350 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. 99 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் பிளாண்ட் தயார் நிலையில் உள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் 10 ஆயிரம் நபர்களுக்கு ஒரே நாளில் பரிசோதனை செய்ய முடியும்.

மூன்றாவது அறை வந்தால் சமாளிக்க அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தாத வயதானவர்கள் மற்றும் முதியவர்களுக்கு அதிக பாதிப்பு வர வாய்ப்புள்ளது என்பதால், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.



லேசான கொரோனா அறிகுறி இருந்தால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்தி உள்ள நபர்களை கண்காணிக்க 32 நபர் அடங்கிய கட்டுப்பாட்டு அறை செயல்பட உள்ளது. தற்பொழுது, கொரோனா பாதிப்பு அடைந்தவர்களில் 10% நபர்கள் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் அதிக பாதிப்பு இருப்பதால் நாமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மாநில எல்லையை தாண்டி பயணிப்பவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பயணிப்பவர்கள், 48 மணி நேரத்திற்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து இருக்க வேண்டும் அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும். இல்லையெனில், அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்.

தற்சமயம் உள்ள சூழ்நிலையில், கோவை மாவட்டத்தில் ஒன்பதாம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை. கோவை மாநகராட்சி பகுதிகளிலும், புறநகர் பகுதிகளில் -- சூலூர், துடியலூர், மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் தான் பாதிப்புகள் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. வருகின்ற நாட்களில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என தெரிவித்தார்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...