நூல் விலையை கட்டுப்படுத்த கோரி திருப்பூரில் போராட்டம்

நூல் விலை உயர்வுக்கு எதிராக ஜனவரி 17-மற்றும் 18-ம் தேதிகளில் பின்னலாடை உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகத் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: நூல் விலை உயர்வுக்கு எதிராக ஜனவரி 17-மற்றும் 18-ம் தேதிகளில் பின்னலாடை உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகத் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பின்னலாடை மற்றும் அதனைச் சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வரக் கூடிய சூழ்நிலையில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

பின்னலாடை உற்பத்திக்கு மிக முக்கிய மூலப்பொருளான நூல் விலை கடந்த ஒரு வருட காலமாக அபரிமிதமாக விலை உயர்ந்து வரக்கூடிய சூழ்நிலையில், தற்போது 330- முதல் 380- வரை விற்கப்படுவதால் முன்கூட்டியே பெற்ற ஆர்டர்களை முடிப்பதிலும், புதிய ஆர்டர்களை பெறுவதிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஏற்கனவே பல முறை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று நவம்பர் 26-ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியும், நூல் விலை மீண்டும் உயர்ந்து வருவதால் பின்னலாடை தொழில் முழுவதும் முடங்கக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லும் வகையில் ஜனவரி 17-மற்றும் 18-ம் தேதிகளில் திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பின்னலாடை நிறுவனங்களில் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், உடனடியாக மத்திய அரசு கவனத்தில் கொண்டு பருத்தி இறக்குமதிக்கான 11-சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும், நூல் மற்றும் பருத்தி ஏற்றுமதியைக் குறிப்பிட்ட காலத்திற்குத் தடை செய்து உள்நாட்டு உற்பத்திக்கு அதிக அளவு பயன்படுத்தத் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம் கேட்டுக்கொண்டார்.

ஜனவரி 17-மற்றும் 18-ம் தேதிகளில் நடைபெற உள்ள உற்பத்தி நிறுத்தப் போராட்டத்திற்குத் திருப்பூரில் அனைத்து தொழில் சார்ந்த அமைப்புகளிடம் ஆதரவு கேட்கப் போவதாகத் தெரிவித்தார்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...