திருப்பூரில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு கிராம மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பாக தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழ்நாடு கிராம மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் எஸ்.சுரேஷ் தலைமை வகித்தார்.

இதில் பங்கேற்றவர்கள் பேசியதாவது:-

தமிழகத்தில் உள்ள 12-ஆயிரத்து 624-கிராம ஊராட்சிகளிலும் மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்கள் அனைவரும் கிராம ஊராட்சியில் பணியாற்றுபவர்கள்.

எங்கள் பணி இன்றி கிராம ஊராட்சி நிர்வாகத்தைச் செயல்படுத்த இயலாது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம், வீதிகளைச் சுத்தம் செய்து பிளிச்சீங் பவுடர் தூவுதல் மற்றும் கிருமிநாசினி அடித்தல் போன்ற அத்தியாவசிய பணிகள் களத்தில் நின்று உயிர் பயமில்லாமல் மக்களைக் காக்கும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினோம்.

இந்த நிலையில், எங்களின் நிலை கருதி பணியின் தன்மையை அரசு உணர்ந்து முன் கள பணியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகையை வழங்கப்படும் என அறிவித்தது. தற்போது மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறைகளில் பணிபுரியக்கூடியவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.



ஆனால் கிராம ஊராட்சிகளில் கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்ட குடிநீர் மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்களுக்கு அரசின் ஊக்கத்தொகையாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படவில்லை. அரசின் ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றனர்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...