பொள்ளாச்சியில் மூதாட்டியின் கவனத்தை திசைதிருப்பி 5-பவுன் நகை அபேஸ்

பிசியோ தெரபி சிகிச்சை அளிப்பதாக கூறி கவனத்தை திசைதிருப்பி மூதாட்டியிடம் 5-பவுன் நகையை எடுத்து சென்ற இளம்பெண்ணை போலீசார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.



கோவை: பிசியோ தெரபி சிகிச்சை அளிப்பதாக கூறி கவனத்தை திசைதிருப்பி மூதாட்டியிடம் 5-பவுன் நகையை எடுத்து சென்ற மர்ம பெண்ணை போலீசார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

பொள்ளாச்சி சாங்ஸ் திருவீதிப் பகுதியைச் சேர்ந்த காந்தி என்பவரின் மகன் சிவசுப்பிரமணியன் 63. இவர் தனது மனைவி அமுதா உடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவசுப்பிரமணியனும் அவரது மனைவி அமுதாவும் வீட்டிலிருந்தனர்.

அப்போது வீட்டிற்கு வந்த இளம்பெண் ஒருவர் தனக்கு பிசியோதெரபி சிகிச்சை தெரியும் என்றும் புதுக்கோட்டையில் உள்ள பாக்கியம் டீச்சர் மகள் என்றும் தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார்.

மேலும், சிவசுப்பிரமணியன் மனைவி அமுதா ஏற்கனவே புதுக்கோட்டையில் உள்ள பள்ளியில் படித்தவர். எனவே நம்பிக்கையோடு அந்த இளம்பெண்ணிடம் சிவசுப்ரமணியம் மற்றும் அவரது மனைவி அமுதா ஆகியோர் பேசியுள்ளனர். தொடர்ந்து சுப்பிரமணியத்தின் மனைவி தனக்குக் கழுத்து வலி இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

இதை அடுத்து வந்திருந்த இளம்பெண் அமுதாவிடம் கழுத்தில் அணிந்திருக்கும் தங்கச் செயினை கழற்றி வைக்குமாறு கூறியிருக்கிறார். பின்னர் எண்ணெய்யை எடுத்து அவரது கழுத்து மற்றும் கை பகுதிகளில் தேய்த்து பிசியோ தெரபி உடற்பயிற்சிகளைச் செய்துள்ளார்.

பின்னர் அமுதா குளியலறைக்குச் சென்று குளித்து விட்டு மீண்டும் வெளியே வந்து பார்த்தபோது அந்த இளம்பெண் மாயமாகி இருந்தார். மேலும், கழற்றி வைத்து இருந்த 5-பவுன் தங்க செயினும் காணாமல் போயிருந்தது.

வெளியில் சென்று அந்த இளம்பெண்ணைத் தேடிய பொழுது எங்கும் அவர் இல்லை. இதை அடுத்து சிவசுப்பிரமணியம் பொள்ளாச்சி மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...