கொரோனா 3வது அலை தொடங்கியுள்ளதால் பொதுமக்களில் எத்தனை சதவீதம் பேருக்கு கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான எதிா்ப்பாற்றல் உள்ளது என கண்டறியப்பட உள்ளது.
கோவை: கோவையில் கொரோனா எதிா்ப்பாற்றல் குறித்துக் கண்டறிய 1,500 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கொரோனா 3வது அலை தொடங்கி உள்ள நிலையில் பொதுமக்களில் எத்தனை சதவீதம் பேருக்கு கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான எதிா்ப்பாற்றல் (ஆன்டி பாடிஸ்) உள்ளது என்று கண்டறிய பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் கோவையில் மதுக்கரை, துடியலூா், பொள்ளாச்சி, சூலூா் உள்பட 52 இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு வசிக்கும் தொழிலாளா்கள், விவசாயிகள், வயதானவா்கள், இளைஞா்கள் என 1,500 பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த மாதிரிகள் கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள சுகாதாரத் துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள நவீன எந்திரம் மூலம் பரிசோதனை செய்யப்பட உள்ளது.
கோவை மட்டுமின்றி தென்காசி, திருப்பூா், ஈரோடு, நீலகிரி, மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் எடுக்கப்பட்ட ரத்தப் பரிசோதனைகளும் இங்குதான் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பரிசோதனை முடிவுகள் சென்னைக்கு அனுப்பிவைக்கப்படும் என்றனா்.