கோவையில் குடிபோதையில் குளத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது..!

உக்கடம் பெரியகுளத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் அழைத்து மிரட்டல் விடுக்கப்பட்டது.


கோவை: கோவையில் குடிபோதையில் குளத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

கோவை உக்கடம் பெரியகுளத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் அழைத்து மிரட்டல் விடுக்கப்பட்டது.

மிரட்டல் விடுத்த அலைப்பேசி எண்ணை கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே, உக்கடம் குளமும் வெடிகுண்டு நிபுணர்களால் பரிசோதிக்கப்பட்டது.

தொடர்ந்து, மிரட்டல் விடுத்த நபர் குனியமுத்தூரைச் சேர்ந்த பீர்முகமது என்பதும், அவர் கஞ்சா போதையில் மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.



இதையடுத்து, பீர்முகமதுவை குனியமுத்தூர் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். ஏற்கனவே, கடந்த 2018, 2021ம் ஆண்டுகளிலும் மெரினா கடற்கரை உட்பட இடங்களில் இதேபோன்று போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...