கோவை கிணத்துக்கடவு அருகே சரக்கு ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி விபத்து..!

இந்த விபத்து காரணமாக கோவை - பொள்ளாச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கோவை: கோவை கிணத்துக்கடவு பழைய செக்போஸ்ட் பகுதியில் சரக்கு ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு மெட்டுவாவி பகுதியைச் சேர்ந்தவர் நல்லசாமி, விவசாயியான இவர் தனது சரக்கு ஆட்டோவில் இன்று மெட்டுவாவி பகுதியிலிருந்து கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையம் பகுதிக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது, பழைய செக்போஸ்ட் பகுதி சாலையை கடக்கும் போது பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த அரசு பேருந்து சரக்கு ஆட்டோ மீது மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக ஆட்டோ ஓட்டிவந்த நல்லசாமி காயமின்றி தப்பினார்.



இந்த விபத்து காரணமாக கோவை - பொள்ளாச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை மீட்டு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...