புதிதாக அமைக்கப்பட்டு வரும்‌ கொரோனா சிகிச்சை மையத்தில் கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கொரோனா சிகிச்சை அளிப்பதற்காகப் புதிதாக அமைக்கப்பட்டுவரும்‌ கொரோனா சிகிச்சை மையத்தையும்‌, இதர வசதிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கொரோனா சிகிச்சை அளிப்பதற்காகப் புதிதாக அமைக்கப்பட்டுவரும்‌ கொரோனா சிகிச்சை மையத்தையும்‌, இதர வசதிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ ஆர்‌.எஸ்‌.புரத்தில்‌ அமைந்துள்ள கொரோனா ஒருங்கிணைந்த கட்டளை மற்றும்‌ கட்டுப்பாட்டு மையத்தின்‌ (Integrated Command&Control Centre) செயல்பாடுகள்‌ குறித்து தேசிய சுகாதார இயக்க திட்ட இயக்குநர்‌ மற்றும்‌ கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்‌ (கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்‌) மரு.தாரேஸ்‌ அகமது நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.



உடன்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ மரு.ஜி.எஸ்‌.சமீரன்‌‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா‌, வணிகவரித்துறை இணை ஆணையர்‌ ஆனந்த்‌ மோகன்‌‌, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷர்மிளா‌, சுகாதாரப்‌ பணிகள்‌ துணை இயக்குநர்‌ மரு.அருணா, நகர்‌ நல அலுவலர்‌ மரு.சதீஷ்குமார்‌ ஆகியோர்‌ இருந்தனர்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.64 க்குட்பட்ட சிங்காநல்லூர்‌ உப்பிலிபாளையம்‌ சாலையில்‌ உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில்‌ கொரோனா சிகிச்சை அளிப்பதற்காகப் புதிதாக அமைக்கப்பட்டுவரும்‌ (Covid Care Centre‌) கொரோனா சிகிச்சை மையத்தையும்‌, சிகிச்சைக்கான படுக்கை வசதிகள்‌ மற்றும்‌ இதர வசதிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கராநேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி சிங்காநல்லூர்‌ இ.எஸ்‌.ஐ மருத்துவமனையில்‌ தேசிய சுகாதார இயக்கக திட்ட இயக்குநர் மற்றும்‌ கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்‌ (கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்‌) மரு.தாரேஸ்‌ அகமது இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ மரு.ஜி.எஸ்‌.சமீரன்‌‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா‌, வணிகவரித்துறை இணை ஆணையர்‌ ஆனந்த்‌ மோகன்‌‌, இ.எஸ்‌.ஐ. மருத்துவமனை முதல்வர்‌ மரு.ரவிச்சந்திரன்‌, நகர நல அலுவலர்‌ மரு.சதீஷ்குமார் ஆகியோர்‌ உள்ளனர்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.68 இராமநாதபுரம்‌ பகுதியில்‌ உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில்‌ கொரோனா சிகிச்சை அளிப்பதற்காகப் புதிதாக அமைக்கப்பட்டுள்ள (Covid Care Centre)‌ கொரோனா சிகிச்சை மையத்தைத் தேசிய சுகாதார இயக்கக திட்ட இயக்குநர்‌ மற்றும்‌ கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்‌ (கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்‌) மரு.தாரேஸ்‌ அகமது இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு, சிகிச்சை முறைகள்‌ குறித்துக் கேட்டறிந்தார்‌. உடன்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ மரு.ஜி.எஸ்‌.சமீரன்‌‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்௧ரா‌, வணிகவரித்துறை இணை ஆணையர்‌ ஆனந்த்‌ மோகன்‌‌, நகர்‌ நல அலுவலர்‌ மரு.சதீஷ்குமார்‌ ஆகியோர்‌ உள்ளனர்.‌

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...