மீன்பாசி குத்தகை விடுவதில் மீனவர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

கோவை வட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் மீன்பாசி குத்தகை பொது ஏலம் விடப்பட்டால் இந்த மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 761 மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்.


கோவை: தமிழக அரசின் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மீன் பிடிக்கத் தகுதியான நீர்நிலைகளில் மீன்பாசி குத்தகை அளிப்பதில் தமிழகத்தில் உள்ள மீனவர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்தது.

கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை 17-11-1993-ல் வெளியிட்ட அரசாணை எண் 332-ன்படி மீன்பாசி குத்தகையில் மீனவர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மீனவர் கூட்டுறவுச் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அரசு நிர்ணயிக்கும் குத்தகைத் தொகையை செலுத்தி நீர்நிலைகளில் மீன்களை வளர்த்து விற்பனை செய்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 22-12-2021-ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை ஆணையர் அனுப்பிய சுற்றறிக்கையில், நீர் நிலைகளில் மீன்பாசி குத்தகையை பொது ஏலம் விட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதை குறித்து கோயமுத்தூர் வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் எம்.பாலமுருகன், கோவை தெற்கு தொகுதியில் உள்ள மீனவ சமுதாய மக்கள், தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவை வட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் மீன்பாசி குத்தகை பொது ஏலம் விடப்பட்டால் இந்த மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 761 மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்.

கொரோனா பொதுமுடக்கத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மீனவர்களை, மீன்பாசி குத்தகை பொது ஏலம் விடப்படும் என்பது மேலும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

எனவே, மீனவர்களின் நலன் கருதி, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நீர்நிலைகளில் மீன்பாசி குத்தகை ஏலத்தில் மீனவர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழக்கம்போல முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக தலையிட்டு நல்ல தீர்வைக் காண வேண்டும், என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய கைதி, சேலத்தில் கைது..!

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் இருந்து தப்பிய ஆந்திராவைச் சேர்ந்த மோசடி வழக்குக் கைதி பிம்முடு அஜித்குமார்,...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...