இன்று கோவை மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் ஆய்வு செய்தபோது, அதிகமான பயணிகள் முககவசம் அணியாமல் பயணிப்பது தெரியவந்ததை தொடர்ந்து, பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை: கோவையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், நோப்தடுப்பு வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, பொதுவெளியில் முககவசம் அணியாமல் செல்வோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி எச்சரித்துள்ளது.
பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா? என்பதை உறுதி செய்ய கோவை மாநகராட்சியினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து முக்கிய இடங்களில்ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன்படி, இன்று கோவை மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் ஆய்வு செய்தபோது, அதிகமான பயணிகள் முககவசம் அணியாமல் பயணிப்பது தெரியவந்ததை தொடர்ந்து, பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அதன்படி, பேருந்து நிலையத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் மட்டும், ரூபாய். 5,600 அபராதமாக பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, பயணிகளிடம் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுததினர்.