வாளையாறு சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தமிழக கேரள எல்லையான வாளையாறு ஆர்.டி.ஓ சோதனைச்சாவடியில் கேரள லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு கணக்கில் வராத ரூபாய் 67 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது.


கோவை: தமிழக கேரள எல்லையான வாளையாறு ஆர்.டி.ஓ சோதனைச்சாவடியில் கேரள லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அதிகாரிகளைப் பார்த்த மோட்டார் வாகன ஆய்வாளர் பி னோய் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். ஆனால் அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு கணக்கில் வராத ரூபாய் 67 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது. மேலும் தமிழகத்திலிருந்து கேரளாவிற்குச் செல்லும் காய்கறி வாகன டிரைவர்களிடம் காய்கறியை லஞ்சமாக வாங்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து 67 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அங்கு பணியிலிருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் பினோய் உதவி மோட்டார் வாகன ஆய்வாளர் ஜார்ஜ் பிரவீன், கிருஷ்ணன் ஆகியோரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...