மீண்டும் கொரோனா பரவல்: கோவையில் தயாராகும் சிகிச்சை மையங்கள்; பண்டிகைக் காலத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் - ஆட்சியர்

முதல்கட்டமாக, அவினாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக வளாகத்தில், 700 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை சிறப்பு வார்டு அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.


கோவை: தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து, அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவையில் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 80- வரை மட்டுமே இருந்த நிலையில், நேற்று கொரோனா தொற்றின் பாதிப்பு 100-யை கடந்து, இன்று 105 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் கொரோனா சிகிச்சை மையங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, கோவையில் மீண்டும் கொரோனா சிகிச்சை மையங்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலையின்போது ஆக்சிஜன் தேவையுடன் கூடிய படுக்கைகள் கிடைக்காமல் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனவே, அதை கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கல்வி நிலையங்களின் வளாகங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. தற்போது பள்ளி, கல்லூரிகள் இயங்கி வருகின்றன. எனவே, மீண்டும் எந்தெந்த இடத்தில் சிகிச்சை மையங்கள் அமைக்க முடியும் என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.



முதல்கட்டமாக, அவினாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி மையத்தில் டி மற்றும் இ அரங்குகளில் 700 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை சிறப்பு வார்டு அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.



கொடிசியா அரங்கையும், அரசு கலைக்கல்லூரி வளாகத்தையும் மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 24 மணி நேரம் இயங்கும் வகையில் கொரோனா கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தடுப்பூசி விவரங்கள், படுக்கை இருப்புகள் விவரம், ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை விவரம் போன்றவற்றை அறிய இந்த கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 0422-2306051, 2306052, 2306053, 2306054, 2303537 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

ஒமைக்ரான் தொற்று பரவி வருவதால் கொரோனா பரவல் தடுப்பு வழிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் உதவி மையம் அமைக்க வேண்டும். பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், முகக்கவசம் அணிந்து, சமூக இடை வெளியை பின்பற்ற வேண்டும். மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...