பொள்ளாச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி தொடக்கம்

பொள்ளாச்சியில் நியாய விலைக் கடைகள் மூலம் பணி நாட்களில் சுழற்சி முறையில் காலை 9- மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையிலும், பிற்பகல் 2- மணி முதல் மாலை 6- மணி வரையிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சியில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அனைத்து நியாய விலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு முழுநீள கரும்பு, 50 கிராம் முந்திரி, 50 கிராம் உலர் திராட்சை, 50 கிராம் ஏலக்காய் மற்றும் 15 எண்ணிக்கையிலான மளிகை பொருட்கள் அடங்கிய சிறப்புப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு முதல் அமைச்சர் அறிவித்திருந்தார்.

இதனை அடுத்து கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வாயிலாகத் தமிழகத்தில் உள்ள 2,15,48,060 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு ரூபாய் ஆயிரத்து 7,97 கோடி அனுமதித்து தமிழக அரசால் ஆணையிடப்பட்டது.

இதனையடுத்து தமிழக முதலமைச்சர் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். அதன்படி கோவை மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் செயல்படும் நியாயவிலைக்கடைகளின் வாயிலாகப் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யத் திட்டமிடப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதன் ஒரு பகுதியாகப் பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் இன்று தொடங்கி வைத்தனர். இதில் பொள்ளாச்சியில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அனைத்து நியாய விலைக் கடைகள் மூலம் பணி நாட்களில் சுழற்சி முறையில் காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...