பவானியாற்றில் கத்தியை காட்டி மிரட்டி பழங்குடியின பெண்ணை ஆசைக்கு இணங்குமாறு மிரட்டல் விடுத்த கேரள இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: பவானியாற்றில் கத்தியை காட்டி மிரட்டி பழங்குடியின பெண்ணை ஆசைக்கு இணங்குமாறு மிரட்டல் விடுத்த கேரள இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பில்லூர் டேம் பகுதியை சேர்ந்தவர் 33 வயது பழங்குடியின பெண். இவர் அப்பகுதியில் உள்ள பவானியாற்றிற்கு சென்றுள்ளார்.
அப்போது, அங்கு டூவீலரில் வந்த இரு இளைஞர்கள் அப்பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி ஆசைக்கு இணங்குமாறு அழைத்துள்ளனர். பின்னர், அவர்களை பிடித்த அப்பெண் கூச்சலிடவே அப்பகுதி பொதுமக்கள் திரண்டு இரு இளைஞர்களுக்கும் தர்ம அடி கொடுத்து பில்லூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
காவல் துறையினரின் விசாரணையில் கேரள மாநிலம் மன்னார்காடு பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 22), அனீஷ் (வயது 25) என்பதும், அப்பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியதும் தெரிய வந்தது.
இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து பில்லூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். கேரள இளைஞர்கள் இருவர் பழங்குடி பெண்ணிடம் கத்தியை காட்டி ஆசைக்கு இணங்குமாறு மிரட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.