பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் மத்திய ரிசர்வ் படை குழுவினருக்கு ஒருநாள் பேரிடர் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. சுமார் 100-வீரர்கள் ஒத்திகை பயிற்சி மேற்கொண்டனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் மத்திய ரிசர்வ் படை குழுவினருக்கு ஒருநாள் பேரிடர் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
கோவை-மேட்டுப்பாளையம் ரோடு தொப்பம்பட்டியில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களுக்கான பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.
இங்குள்ள வீரர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சிகள் மற்றும் ஒத்திகை பயிற்சிகள் அவ்வப்போது அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் மத்திய ரிசர்வ் படை குழுவினருக்கு ஒருநாள் பேரிடர் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
பயிற்சி மையத்தின் முதல்வர் சதீஷ் சங்கர் வர்மா தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில், கமாண்டோ ஹரிகுமார் மற்றும் இன்ஸ்பெக்டர் சுனில்குமார் முன்னிலையில், சுமார் 100 வீரர்கள் ஒத்திகை பயிற்சி மேற்கொண்டனர்.
இதில் 11 பயிற்சியாளர்கள் கலந்துகொண்டு வீரர்களுக்குப் பயிற்சி அளித்தனர். பேரிடர் காலங்களில் ஏற்படும் வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள் நடைபெறும்போது, அதில் சிக்கிய பொது மக்களை எவ்வாறு மீட்பது, தண்ணீரில் நீந்திச் சென்று எவ்வாறு கயிறு கட்டி மக்களை மீட்பது போன்ற ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.