முதல்வரின் உத்தரவுப்படி விவசாயிகளுக்கு விரைந்து மின் இணைப்புகள் வழங்க கோரிக்கை

விவசாய மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த விவசாயிகளுக்குத் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முதல்வரின் உத்தரவுப்படி விரைந்து மின் இணைப்புகளை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: விவசாய மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த விவசாயிகளுக்குத் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முதல்வரின் உத்தரவுப்படி விரைந்து மின் இணைப்புகளை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மாநில பொதுச்செயலாளர் கந்தசாமி கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் விவசாயிகள் விவசாய மின் இணைப்பு கோரி விண்ணப்பித்துக் கடந்த 20 ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர். தற்போது சாதாரண வரிசையில் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு 2013-ம் ஆண்டு வரை நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு மின் இணைப்பு வழங்கத் தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சுயநிதி மின் திட்டத்தின் கீழ் நிலுவையில் விண்ணப்பங்களில் 2018-ம் ஆண்டு வரை நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு மின் இணைப்பு வழங்க உத்தரவிட்டுள்ளார். சுய நிதி திட்டத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வரை விண்ணப்பித்த விவசாயிகள் விண்ணப்பம் கொடுக்கும் போது இருந்த ஆழ்துளை குழாய்க் கிணற்றில் தற்போது தண்ணீர் இல்லை.

அதே விவசாயிகளின் பெயரில் வேறு சர்வே எண்ணில் உள்ள குழாய்க் கிணற்றுக்கு மின் இணைப்பு தருவதற்கு மின்வாரியம் மறுக்கிறது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய உத்தரவின்படி சாதாரண வரிசையில் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டும் சர்வே எண் மாற்றம் செய்யப்பட்டு மின் இணைப்பு வழங்க வழிவகை உள்ளது. இதே போல் சுய நிதி திட்டத்திற்கும் வழங்க வேண்டும். விரைவாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...