கிணத்துக்கடவில் சாலை விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

கிணத்துக்கடவு அருகே உள்ள முள்ளுபாடியில் இருசக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த அரசுப் பள்ளி மாணவன் உயிரிழந்துள்ளார்.


கோவை: கிணத்துக்கடவு அருகே உள்ள முள்ளுபாடியில் இருசக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த அரசுப் பள்ளி மாணவன் உயிரிழந்துள்ளார்.



கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையம் போயர் காலனி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (38) இவரது மகன் சரத் (14) கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்தநிலையில், இன்று காலை கார்த்திக்கின் மகன் சரத், அவரது உறவினர் குருசாமி(19) என்பவரோடு இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து கொண்டு அரண்மனைபுதூர் பகுதியிலுள்ள உறவினரைப் பார்க்கச் சென்றுள்ளார்.



அப்போது, முள்ளுபாடி ரயில்வே மேம்பாலத்தின் கீழ் வழியாகச் சென்று கொண்டிருக்கும் போது திடீரென குருசாமி பிரேக் பிடித்ததில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த சரத் இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள் சரத் மற்றும் காயமடைந்த குருசாமி மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு வழியிலேயே பள்ளி மாணவன் சரத் உயிரிழந்துள்ளார்.

மேலும், காயமடைந்த குருசாமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...