கோவையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவையில் 14 -வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக கட்டிடத் தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.


கோவை: கோவையில் 14 -வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக கட்டிடத் தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கோவை சரவணம்பட்டியை அடுத்த சிவானந்த புரத்தைச் சேர்ந்தவர் 14 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் கடந்த மாதம் 13-ந்தேதி திடீரென மாயமானார். கோவை கிழக்குப் பகுதி மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து மாணவியைத் தேடி வந்தனர். ஆனால் மாணவி கொலை செய்யப்பட்டு சரவணம்பட்டி யமுனா நகர்ப் பகுதியில் சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்டு இருந்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான முத்துக்குமார் (44) என்பவர் பலாத்காரம் செய்து கொன்றது தெரியவந்தது.

முத்துக்குமார், கொல்லப்பட்ட மாணவியின் தாயாருடைய நண்பர் ஆவார். முத்துக்குமாருக்கும், மாணவியின் தாயாருக்கும் இடையே நகை கொடுக்கல், வாங்கல் தொடர்பாகத் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராற்றில் மாணவியை முத்துக்குமார் கடத்திச் சென்று கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து முத்துக்குமாரை போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் முத்துக்குமாரை குண்டர் சட்டத்தில் அடைக்க போலீசார் பரிந்துரை செய்தனர். அதன்பேரில் இன்று முத்துக்குமார் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...