சூலூரில் துணிக்கடையில் ரூ.20 லட்சம் திருட்டு: வாலிபர் கைது

சூலூரில் துணிக்கடையில் ரூ.20 லட்சம் திருடிய கடையில் வேலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: சூலூரில் துணிக்கடையில் ரூ.20 லட்சம் திருடிய கடையில் வேலை செய்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருப்பத்தூரைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது 60). இவர் சூலூர் புதிய பஸ் நிறுத்தம் அருகே வாடகைக்குக் கட்டிடம் எடுத்துத் துணி கடை வைத்து வடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி அவர் துணிக்கடையை விரிவுபடுத்துவதற்காக ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்தை தயார் செய்து வைத்திருந்தார்.

அதனை மேஜை லாக்கரில் வைத்துவிட்டு சொந்த பணியாக வெளியே சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மேஜை லாக்கர் திறந்து இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே பார்த்தபோது பணம் மாயமாகி இருந்தது. அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் அவர் இதுகுறித்து சூலூர் போலீசில் புகார் தெரிவித்தார்.

இந்தநிலையில் பணம் திருட்டுப் போன 2 -வாரங்களுக்கு முன்பு அவரது கடையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஹேராம் (23) என்பவர் விற்பனையாளராக வேலைக்குச் சேர்ந்தார்.

அவரது நடவடிக்கையில் சவுந்தர ராஜுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. சம்பவத்தன்று ஹேராமிடம் அவர் பணத்தைப் பற்றி கேட்டார். அப்போது ஹேராம் முன்னுக்கு பின்னாக பதில் அளித்தார்.

அதனால் சவுந்தரராஜன் அவரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில் அவர் பணத்தைத் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹேராமை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...