தாராபுரத்தில் கருப்பு துணி கட்டி நீதிகேட்டு தராசு ஏந்தி நூதன போராட்டம்

தாராபுரத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கண்களில் கருப்பு துணி கட்டி, நீதி கேட்டு தராசு ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கண்களில் கருப்பு துணி கட்டி நீதிகேட்டு தராசு ஏந்தி நூதன போராட்டம் நடைப்பெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் சாலையில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கண்களில் கருப்பு துணி கட்டி நீதி கேட்டு தராசு ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தாராபுரம் கோட்ட சாலைப் பணியாளர்களின் முதுநிலை பட்டியலை வெளியிடுக, அரசுப் பணியாளர் விதிமுறைகளைப் பின்பற்றி பட்டியலை வெளியிடுக, அரசுப் பணியாளர் விதிமுறைக்குப் புறம்பாக வெளியிடப்பட்ட கோட்ட முதுநிலை பட்டியலை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், தவறான முதுநிலை பட்டியல் தயார் செய்த கோட்ட பொறியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், தாராபுரம் கோட்ட நிர்வாகத்தைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஜே பீட்டா கோட்டத் தலைவர் தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...