ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகும் குழந்தைகள்: கோவையில் சிறுவர்-சிறுமியர்கள் விழிப்புணர்வு

பள்ளி சிறுவர்-சிறுமியர்கள் வீடு வீடாகச் சென்று குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவது குறித்து நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.


கோவை: பள்ளிச் சிறுவர்-சிறுமியர்கள் வீடு வீடாகச் சென்று குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவது குறித்து நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் வகுப்புகளுக்காகக் குழந்தைகள் ஸ்மார்ட்போன்கள் மூலம் பயின்று வந்தனர். படிப்பிற்காக செல்போன்கள் உபயோகித்த போதிலும் பல குழந்தைகள் செல்போன் விளையாட்டுகளில் மூழ்கினர்.

கொரோனா ஊரடங்கு முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும் பல குழந்தைகளிடையே அந்தப் பழக்கம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்குவதைத் தடுக்கும் வகையில், கோவை குரும்பபாளையம் ஜே.ஜே நகர் பகுதியில் வசித்து வரும் பிரணவ், பவன், கணேஷ் பாலா, அமுத ஸ்ரீ, கிரிஷிகா, சஞ்சய் ராம் வேல், ரித்தீஷ், சஷ்டிக், பத்மேஷ் பாலா ஆகிய 9-பள்ளி சிறுவர்-சிறுமியர்கள் இணைந்து தங்களது பகுதியில் வீடு வீடாகச் சென்று ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்து நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

சிறுவர் சிறுமியரின் இந்தச் செயல் அப்பகுதியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் குழந்தைகள் மூலம் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இதுவரை 100-வீடுகளில் இந்த நோட்டீஸ் வழங்கி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...