வால்பாறையில் 15-18 வயது சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி

வால்பாறையில் கொரோனா தடுப்பு 15-வயது முதல் 18-வயது வரை தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. முதல் கட்டமாக 200-மாணவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி ஊசி செலுத்தப்பட்டது.


கோவை: வால்பாறையில் கொரோனா தடுப்பு 15-வயது முதல் 18-வயது வரை தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடமாக கொரோனா பெருந் தொற்று பரவி அதிகரித்து வருவதால் கொரோனா தொற்றைக் குறைக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

18-வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி மூலம் கொரோனா பெருந்தொற்றை குறைக்க வருகிறது. கொரோனா தொற்று குறைந்த நிலையில், மூன்றாவது அலை தொடங்கி வருகிறது.

கொரோனா உருமாறிய ஓமிக்ரோன் வைரஸ் பரவி வருவதால், தமிழக அரசு 15-வயது முதல் 18- வயது வரை அனைவருக்கும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் பணி இன்று தொடங்கப்பட்டது.



இந்நிலையில், கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சுகாதாரத் துறை ஆய்வாளர் பாபு லட்சுமணன் தலைமையில், வால்பாறையில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 550- மாணவர்கள் படித்து வருகின்றனர்.



அவர்களுக்கு முதல் கட்டமாக 200-மாணவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் பள்ளிகளில் தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்தனர்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...