கோவையில் தனியார் லேஅவுட்டிடம் இருந்து 30 அடி சாலை மீட்பு - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை..!

மீண்டும் சாலையை ஆக்கிரமித்து வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை காளப்பட்டி அருகே தனியார் லேஅவுட்டால் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 30 அடி சாலை மாநகராட்சி அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.

கோவை காளப்பட்டி நேரு நகர் அருகே தனியார் லேஅவுட் ஒன்று உள்ளது. இந்த லேஅவுட்டில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வரை 30 அடி சாலை உள்ளது.



இந்த லேஅவுட்டில் உள்ள சாலை வழியாக அருகில் இருக்கும் விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு செல்ல முடியும். ஆனால் இந்த பாதை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான புகார் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அதிகாரிகள் புகார் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.



பின்னர், இந்த சாலை மாநகராட்சி சாலை எனவும், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, தனியார் லேஅவுட் கட்டுப்பாட்டில் இருந்த சாலை மீட்கப்பட்டது.



இதனிடையே, மீண்டும் சாலையை ஆக்கிரமித்து வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...