திருப்பூரில் வழிப்பறியில் ஈடுபட்ட மற்றும் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட முயன்ற 7 பேர் கைது..!

நேற்று இரவு வாய் பேச முடியாத நபரிடம் ஹக்கீம் மற்றும் அப்துல் ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டு, அவரை அடித்து பணத்தை பிடுங்கி உள்ளனர்.


திருப்பூர்: திருப்பூரில் வழிப்பறியில் ஈடுபட்ட மற்றும் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட முயன்ற 7 பேரை திருப்பூர் வடக்கு காவல் நிலையம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

திருப்பூரில் நேற்று இரவு தற்காலிக பேருந்து நிலையம் பகுதியில் வாய் பேச முடியாத நபரிடம் ஹக்கீம் மற்றும் அப்துல் ஆகிய இரண்டு பேர் அவரை அடித்து பணத்தை பிடுங்கி உள்ளனர்.

இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் வடக்கு காவல் துறையினர் குற்றவாளிகள் இரண்டு பேரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

அதேபோல, திருப்பூர் கல்லூரி சாலை ரயில்வே ட்ராக் முற்புதர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நபர்கள் புதரில் நீண்ட நேரம் மறைந்து இருப்பதை அறிந்த அப்பகுதியினர், திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கொடுத்தனர்.



அந்த தகவலின் அடிப்படையில், கல்லூரி சாலை ரயில்வே ட்ராக் இருக்கும் பகுதிக்குச் சென்ற திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு காவல்துறையினர் அங்கிருந்த 5 பேரையும் பிடித்துள்ளனர்.

அப்போது, அவர்கள் கையில் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருந்ததைக் கண்டு அனைவரையும் திருப்பூர் வடக்கு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில், சேக் முகமது (18), தீபன் (19), யாசர் அராபத் (23), அருண்குமார் (24), மணிகண்டன் (18) என தெரியவந்தது. இவர்கள் திருப்பூர் பகுதிகளில் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட முடிவு செய்ததாக தெரியவந்தது. இதையடுத்து, காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...