இப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளதால் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகள், முதியவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
திருப்பூர்: திருப்பூரில் பூமி பூஜை போடப்பட்டு ஒரு ஆண்டுகள் ஆகியும் பணிகள் நடைபெறாததை கண்டித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டு தந்தை பெரியார் காலனியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இதனிடையே, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமி பூஜை போடப்பட்டு, அதற்கான நிதியான சுமார் 20 லட்சம் ஒதுக்கப்பட்ட நிலையில், இது நாள் வரை சாலை அமைக்கப்பட வில்லை என கூறப்படுகிறது.

அதேபோல், இப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளதால் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகள், முதியவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகவே, தாங்கள் உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு சாலை அமைக்க வழிவகை செய்யுமாறு கோரி அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.