மீன்பிடி குத்தகை பாசி உரிமையை உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வலியுறுத்தி தாராபுரம் மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் மனு..!

அனைத்து வித நீர்நிலைகளில் மீன்பிடி குத்தகை பாசி உரிமையை உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தாராபுரம் மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் மீன் பிடிக்கும் வலையுடன் வந்து மனு அளித்தனர்.


திருப்பூர்: உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி தமிழகத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வித நீர்நிலைகளில் மீன்பிடி குத்தகை பாசி உரிமையை உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தாராபுரம் மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் மீன் பிடிக்கும் வலை உடன் வந்து மனு அளித்தனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்கத்தில் தாராபுரம் மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களால் மீன் பிடித்தல் ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த சங்கம் சார்பில் மீன்பிடித்தொழில் செய்யப்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஆண்டு ஏலம் மூலம் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இதனால் கூட்டுறவு சங்க உறுப்பினர்களால் மீன் பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மதுரையில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற கிளையில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தொடுத்த வழக்கில் கூட்டுறவு சங்கங்களுக்கு மீன்பிடி குத்தகையில் முன்னுரிமை கூடாது என்றும் பொது ஏல முறையில் மட்டுமே மீன்பிடி குத்தகை உரிமை வழங்க வேண்டும் என்ற தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பினால் 2.35 லட்சம் மீனவ மக்களின் குடும்பம் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மீன்பிடித் தொழிலை அடிப்படையாகக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வரும் 300 உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்கள், அவற்றின் அங்கத்தினர்களாக உள்ள 82 ஆயிரம் உறுப்பினர்கள் மற்றும் 72 உள்நாட்டு மீனவ மகளிர் கூட்டுறவு சங்கங்கள் அதன் உறுப்பினர்கள் ஏழாயிரம் பேர் என அனைவரது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

எந்த நோக்கத்திற்காக கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கங்கள் முற்றிலும் சிதைக்கப்படும். ஏனெனில் பெரும் பண வசதி படைத்தவர்கள் மட்டுமே நீர்நிலைகளை ஏலம் எடுக்க முடியும்.



எனவே கூட்டுறவு சங்கங்களை பாதுகாக்கும் வகையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் நீர்த்தேக்க மீன்பிடி குத்தகை உரிமம் தொடர்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், தமிழகத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துவித நீர்நிலைகளில் மீன்பிடி உரிமையை உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை திருப்பூர் மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்க கூட்டமைப்பு சார்பில், மீன் பிடிக்கும் வலையோடு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

Newsletter

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...