கோவை துடியலூர் அருகே நள்ளிரவு ஏ.டி.எம் மையத்துக்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர்கள் இருவர் கைது..!

விசாரணை முடிந்ததும் குற்றவாளிகள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை துடியலூர் அருகே நள்ளிரவு ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை துடியலூர் அருகே உள்ள ராக்கிப்பாளையம் பிரிவில் எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த மையத்துக்குள் நள்ளிரவு 2 மணியளவில் 2 வாலிபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர் ஏ.டி.எம். எந்திரத்தின் கதவை திறந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். இந்த தகவல் மும்பையில் உள்ள வங்கி அலுவலகத்துக்குச் சென்றது.

உடனடியாக வங்கி அதிகாரிகள் இது குறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ஏ.டி.எம். மையத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது, ஏ.டி.எம். எந்திரம் திறந்து இருந்தது.

இதனையடுத்து, மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 2 வாலிபர்கள் குடிபோதையில் தள்ளாடியபடி ஏ.டி.எம். எந்திரத்தை திறக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதில் பதிவான காட்சிகளை வைத்து அந்த பகுதி முழுவதும் போலீசார் தேடினர்.

அப்போது ஏ.டி.எம். மையத்துக்கு அருகிலேயே 2 வாலிபர்கள் நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் அருகே போலீசார் சென்று பார்த்த போது அவர்கள் தான் ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயன்றது தெரிய வந்தது. பின்னர் போலீசார் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சந்திரசேகர் (24), பிருந்தாவன் பாகரதி (26) என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் 2 பேரும் நரசிம்ம நாயக்கன் பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது. இவர்கள் ஏ.டி.எம். மையத்துக்கு அருகிலேயே அறை எடுத்து தங்கி உள்ளனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்துள்ளனர்.

பின்னர் போதை தலைக்கேறிய நிலையில் அறைக்குச் செல்லும் வழியில் ஏ.டி.எம். மையத்தை திறந்து கொள்ளையடிக்க முயன்றது தெரிய வந்தது. விசாரணை முடிந்ததும் போலீசார் 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...