திருப்பூரில் பொங்கல் பரிசு பணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 5000 வழங்க கோரி இந்து தேசிய கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!

மேலும், தமிழக அரசு உடனடியாக பொங்கல் பரிசு பணத்தை வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி பொங்கல் பானையை கீழே போட்டு உடைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



திருப்பூர்: திருப்பூரில் பொங்கல் பரிசு பணமாக தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஐந்தாயிரம் பணம் வழங்கக்கோரி பொங்கல் பானையை உடைத்து இந்து தேசிய கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அப்போதைய அதிமுக அரசு 2500 ரூபாய் பொங்கல் பரிசு பணம் வழங்கியது.

அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் பொங்கல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றார்.



எனவே, தற்போதைய திமுக அரசு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு பணம் ஐந்தாயிரம் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்து தேசிய கட்சியினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பொங்கல் பானையை தலையில் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும், தமிழக அரசு உடனடியாக பொங்கல் பரிசு பணத்தை வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி பொங்கல் பானையை கீழே போட்டு உடைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...