பணம் கொள்ளை போவதை தடுக்க அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் லாக்கர் வசதி..!

மாநில அளவில் முதல் கட்டமாக 2,825 டாஸ்மாக் கடைகளில் லாக்கர் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


கோவை: தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணம் திருடு போவதை தடுக்க அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் லாக்கர் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 6,350 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இங்கு தினமும் சுமார் 60 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை ஆகிறது. மதுபான கடைகளில் மது விற்பனை செய்த பின்னர் இரவு நேரத்தில் பணம் கொண்டு போவதை கண்காணிக்கும் திருடர்கள், தாக்குதல் நடத்தி பணம் பறித்துச் செல்வது அவ்வப்போது நடக்கிறது.

கடந்த ஆண்டில் 145 டாஸ்மாக் கடைகளில் திருட்டு கொள்ளை நடந்தது. 23 டாஸ்மாக் கடைகளில் இருந்து பணம் பறிக்கப்பட்டதாக வழக்குப் பதிவானது.

வழிப்பறி கொள்ளையர்கள் கத்தி அரிவாளுடன் டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி பணம் பறிப்பதால் ஊழியர்கள் அச்சம் அடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து, கடைகளில் வசூலாகும் பணத்தை விரைவில் கொண்டு செல்லாமல் கடைகளில் லாக்கர் அமைத்து அதில் பணத்தை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

மாநில அளவில் முதல் கட்டமாக 2,825 டாஸ்மாக் கடைகளில் லாக்கர் அமைக்கப்பட்டுள்ளது.

300 கிலோ எடையில் இரும்பு தகரம் அமைத்து அதை தரையில் பதித்து வைத்துள்ளனர். இதர கடைகளிலும் இது போன்று அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய கைதி, சேலத்தில் கைது..!

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் இருந்து தப்பிய ஆந்திராவைச் சேர்ந்த மோசடி வழக்குக் கைதி பிம்முடு அஜித்குமார்,...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...