கோவை தடாகம் பகுதியில் சமூக ஆர்வலர்கள் மற்றும் செங்கல் சூளை உரிமையாளர்கள் இருதரப்பிற்கும் இடையே கைகலப்பு.

கோவை தடாகம் செங்கல் சூளை பகுதியில் ட்ரோன் பயன்படுத்திய சமூக ஆர்வலர்களுக்கும், செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் அவர்கள் ஆதரவாளர்களுக்கும் கைகலப்பு.


கோவை: கோவை தடாகம் செங்கல் சூளைகள் உள்ள பகுதியில் ட்ரோன் பயன்படுத்திய சமூக ஆர்வலர்களுக்கும், செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் அவர்கள் ஆதரவாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கோவை தடாகம் பகுதிகளில் சமூக ஆர்வலர் கணேஷ் உள்ளிட்ட 3 பேர் அப்பகுதியில் டிரோன் கேமரா மூலம் செங்கல் சூளையை படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் செங்கல் சூளை ஆதரவாளர்கள், அவர்களிடம் கேட்டபோது முறையான தகவல் தெரிவிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில், செங்கல் சூளை ஆதராளர்கள் தரப்பினரான, லாரி மெக்கானிக் ரவிசந்திரனைகாயமடைந்ததாக கூறி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். 



இந்த நிலையில், சமூக ஆர்வலர்கள் தாக்கியதாக எழுந்த புகாரின் பேரில், சமூக ஆர்வலர்கள் -- மருத்துவர் ரமேஷ், அவரது மகள், மேக் மோகன் , கணேஷ் உள்ளிட்டோர் தடாகம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

கோவை மாவட்டம்,தடாகம் பள்ளதாக்கில் கனிம வள கொள்ளையில் ஈடுபட்டதோடு, அரசின் அனுமதி பெறாமல் நடத்தப்பட்டு வந்த 181 செங்கல் சூளைகள் உயர் நீதிமன்ற ஆணையின்படிகடந்தாண்டு மார்ச் மாதம் மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கனிமவள கொள்ளை நடந்த இடங்களை அழிக்கும் முயற்சியில் செங்கல்சூளை உரிமையாளர்கள் ஈடுபட்டு வருவதாக,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு அளித்ததன் விளைவாக அந்த முயற்சி தடுக்கப்பட்டது. 



இதனையடுத்து, கனிம வள கொள்ளைகளை ஆவணப்படுத்தும் விதமாக,சமூக ஆர்வலர்கள் -- மருத்துவர் ரமேஷ் , அவரது மகள், மேக் மோகன் , கணேஷ் உள்ளிட்டோர் தடாகம் பகுதியில் இன்று மதியம், கொள்ளை நடந்த இடங்களை ட்ரோன் மூலம்கட்சிப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது , ட்ரோன் பறக்க விட எதிர்ப்பு தெரிவித்து அங்கு வந்த செங்கல் சூளையை சேர்ந்தாவர்களை, சமூக ஆர்வலர்கள்தாக்கியதாக குற்றம் சாட்டினர். 



இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தடாகம் காவல் துறையினர் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்திசமூக ஆர்வலர்களை பத்திரமாக தடாகம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்குஅழைத்து சென்றனர். 

இதனைத்தொடர்ந்து, தடாகம் காவல் நிலையத்தின் முன் குவிந்த செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சமூக ஆர்வலர்களை கைது செய்ய வலியுறுத்தி 500 க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜபாண்டியன் உரியவிசாரணைநடத்தப்படுமெனஉறுதியளித்ததைத் தொடர்ந்து முற்றுகையில் ஈடுப்பட்டவர்கள் கலைந்து சென்றனர்.

சமூக ஆர்வலர்களை தடாகம் காவல் நிலையத்தில் வைத்துள்ளதாகவும்,இன்னும் புகார் பெறப்படவில்லை என்பதால்அவர்கள் மீது வழக்கு பதியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...